புரிந்துணர்வுடனான சகஜ வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன்: பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி.

0
151

(நாச்சியாதீவு பர்வீன்)

unnamed-4சகல இன மக்களினதும் புரிந்துணர்வுடனான சகஜ வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன்.இந்த நாட்டில் வாழுகின்ற எல்லா இனத்தவர்களும் நிம்மதியான,சந்தோசமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். அதுவே எனது அவா என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் தெரிவித்தார்கள் தியாகத்திருநாளாம் புனித ஹஜ்ஜூப்பெருநாளை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச்செய்தியிலேயே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அந்த வாழ்த்துச்செய்தியிலேயே மேலும் அவர் கூறுகையில்

தியாகத்தை வலியுறுத்தும் புதிய ஹஜ்ஜூப்பெருநாள் இந்த உலகிற்கு பல பாடங்களை சொல்லித்தருகிறது. இறைவனின் கட்டளைக்கினங்க இப்றாகீம் நபி குடும்பத்தினரின் செயற்பாடுகள்,அதன் மூலம் அவர்கள் அனுபவித்த கஷ்டங்கள் போன்றவை முழு உலகுக்கும் மிகப்பெரும் பாடமாகும். பொறுமை,தியாகம்,விட்டுக்கொடுத்தல் ஆழமான இறை நம்பிக்கை போன்ற பலநூறு விடயங்களை இந்த நாள் கற்றுத்தருகிறது. எனவே இந்த நாளின் உண்மையான தாத்பரியத்தை உணர்ந்து அதனை பின்பற்றுகின்றவர்களாக நாம் செயற்படுவோம்  . அத்தோடு இந்த உலகிலும்,நமது நாட்டிலும் நாம் எதிர்பர்க்கின்ற மெய்யான சமாதானமும்,ஒற்றுமையும் மலர்வதோடு சகல இனமக்களும் புரிந்துணர்வுடனும்,விட்டுக்கொடுப்புடனும் வாழுகின்ற ஒரு நல்லாட்சிக்கா பிரார்த்தனை செய்கிறேன் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY