சவூதி அரேபியா தொடர்பில் ஈரானிய ஆன்மிகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமைனி முன்வைத்துள்ள கருத்துகளுக்கு முஸ்லிம் உலக நாடுகள் தமது கண்டனத்தை வெ ளியிட்டுள்ளன.வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பு கவுன்சிலின் பொதுச் செயலாளர் அப்துல் லதீக் அல் ஸயானி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொமைனியின் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை.
இவ்வாறான வார்த்தைகள் சாதாரண முஸ்லிமிடமிருந்து கூட வெ ளிப்படக் கூடாது. ஆனால் இஸ்லாமியக் குடியரசு என்று தம்மை அழைத்துக் கொள்ளும் நாட்டின் ஆன்மிகத் தலைவரிடமிருந்து இவை வெ ளிப்பட்டுள்ளமை கவலைக்குரியன எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உலக முஸ்லிம்களின் புனித ஹஜ் கடமையையும் இரு புனித தலங்களையும் கொச்சைப்படுத்தும் செயற்பாடே இது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ஈரானின் இந்தச் செயற்பாட்டை வன்மையாகக் கண்டித்து சவூதி வெ ளிவிவகார அமைச்சர் அடேல் அல் ஜுபைர் தமது அரசாங்கத்தின் இயலாமைகளிலிருந்து ஈரான் மக்களின் கவனத்தை திசை திருப்பவே இவ்வாறான கருத்துக்களை கொமைனி வெ ளியிடுவதாக தெரிவித்துள்ளார்.
இரு புனித தலங்களையும் சவூதி அரேபிய அரசாங்கம் நிர்வகிக்கக் கூடாது என்றும் சர்வதேச குழுவொன்று பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஈரான் ஆன்மிகத் தலைவர் கொமைனி விடுத்த அழைப்பை எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட புத்திஜீவிகள் கவுன்சில் நிராகரித்துள்ளது.
அதேேபான்று பாகிஸ்தான் இஸ்லாமாபாத்திலுள்ள இஸ்லாமிய நிறுவனங்களின் தலைமைகளின் ஒன்றியமும் இதனைக் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli-