கேரளா கஞ்சாவை வைத்திருந்த வயோதிபரின் விளக்கமறியல் நீடிப்பு

0
104

(அப்துல்சலாம் யாசீம்-)

released_open_jailதிருகோணமலை-மொறவெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் அரை கிலோ கேரளா கஞ்சாவை வைத்திருந்த வயோதிபரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் நேற்று (08) டி்.சரவணராஜா உத்தரவிட்டார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை-மயிலகுடாவெவ பகுதியைச்சேர்ந்த பிரிபண்டாகே சோமபால (71 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேச நபரான வயோதிபர் கேரளா கஞ்சாவை விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த சந்தேக நபரின் வீட்டுக்குச்சென்று சோதனை மேற்கொண்டபோதே கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான வயோதிபரை நேற்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY