(Poem) காவிரியும் கருநாடகமும்

0
26

(Mohamed Nizous)

நீங்கள் அத்தனை பேரும் இந்தியர் தானா சொல்லுங்கள்.
உங்கள் தேச நெஞ்சைத் தொட்டுப் பார்த்துச் சொல்லுங்கள்.
உள்ள நீரை
இல்லை என்றால்
இல்லாதவர்கள் எங்கே செல்வார் சொல்லுங்கள்.
பின்னர்
எங்கள் இந்தியா
என்பது என்ன?
கங்கையென்பது உங்கள் சொத்தா சொல்லுங்கள்!

தமிழ் நாட்டைத் தாக்குகின்ற
கருனாடகம் கண்டேன்.
அநியாயம் லாறிகளில் அரங்கேறக் கண்டேன்.
எதிராக கோஷம் போட்டு
ஏனிந்த வேசம்?
இப்போது புரியாது
எதிர்காலம் காட்டும்.
மாநிலம் காட்டி
மானிடம் அழிக்கிறார்.
காணிக்கு நீர் தரும்
காவிரி மறுக்கிறார் சரிதானா?
மோடியின் அரசு
ஓடி ஒழியுது.
வாடுவோர் துன்பம்
போக்க ஆளில்லை
பார் இதனை.

LEAVE A REPLY