சம்பூர் சிறுமி படுகொலை; 16 வயது சிறுவன் கைது!

0
353

(அப்துல் சலாம் யாசீம்)

arrestதிருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட நீலாங்கேணி பகுதியில் நான்கு வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சந்தேகத்தின் பேரில் இளைஞனொருவனை கைது செய்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர் நல்லூர்-நீலாங்கேணி பகுதியைச் சேர்ந்த சிவம் அனுசாந்தன் (16 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனை இன்று (09) மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாளை சனிக்கிழமை சட்ட வைத்திய நிபுணர் பிரேத பரிசோதனையை நடாத்தவுள்ளதாகவும் வைத்தியசாலையின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY