ஜோர்ஜியாவில் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: மூவர் பலி

0
119

georgiaஜோர்ஜியாவில் சிறிய ரக விமானங்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

அட்லாண்டாவில் இருந்து சுமார் 45 மைல் தொலைவில் உள்ள காரோல்டானில் அமைந்துள்ள மேற்கு ஜோர்ஜியா பிராந்திய விமான நிலையத்தில் ஒரு என்ஜின் வலு கொண்ட இரு சிறிய ரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.

இதில் விமானத்தில் இருந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் சிக்கிய விமானங்கள் டைமன்ட் எயார் கிராப்ட் DA20C1 மற்றும் பீச் F33A ரகத்தைச் சேர்ந்தவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY