லசந்தவின் சடலம் 27ம் திகதி தோண்டி எடுக்கப்பட உள்ளது

0
91

lasantha_ciசண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் எதிர்வரும் 27ம் திகதி தோண்டி எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வு பிரிவினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் சடலத்தை தோண்டி எடுத்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது.

2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலைச் சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியைப் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

லசந்த கொலையுடன் தொடர்படைய சந்தேகத்தின் பேரில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY