iPhone 7 இற்கு போட்டியாக களமிறங்கும் LG V20 இன் சிறப்பம்சங்கள்

0
25

lg-v20-aperture-gamesஅப்பிள் நிறுவனம் இன்றைய தினம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான iPhone 7 மற்றும் iPhone 7 Plus என்பவற்றினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

இவற்றினை எதிர்வரும் 16ம் திகதி முதல் கொள்வனவு செய்து கொள்ள முடியும்.

இந் நிலையில் இக் கைப்பேசிகளுக்கு போட்டி போடும் வகையில் LG நிறுவனம் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

LG V20 எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த கைப்பேசியானது 5.7 அங்குல அளவுடையதும் 2560 x 1440 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இது தவிர Qualcomm Snapdragon 820 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

மேலும் தலா 8 மற்றும்16 மெகாபிக்சல்களை உடைய டுவல் கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

இம் மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படவுள்ள குறித்த கைப்பேசியின் விலை உட்பட ஏனைய தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY