சம்பூர் பொலிஸ் பிரிவில் புதைக்கப்பட்ட நிலையில் நான்கு வயது சிறுமியின் சடலம் மீட்பு

0
60

(அப்துல்சலாம் யாசீம்)

unnamed-4திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட நீலாங்கேணி பகுதியில் நான்கு வயது சிறுமியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம் நல்லூர்-நீலாங்கேணி பகுதியைச்சேர்ந்த ஜெகதீஸ்வரன் அஜந்தா (04 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-இன்று காலை 9 மணியளவில் வீட்டிலிருந்த சிறுமி காணாமல் போயுள்ளதாக தெரியவந்ததையடுத்து தேடுதலில் ஈடுபட்ட கிராமமக்கள் காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

சிறுமியை துஷ்பிரோகம் செய்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்ற நிலையில் சந்தேகத்திற்குறிய இளைஞறும் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

சடலம் புகைக்கப்பட்ட இடத்தில் காணப்படுவதாகவும் விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY