காத்தான்குடி பொலிஸ் பிரிவு படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தரின் சடலத்தை பிரேத பரிசோதiனை செய்யுமாறு நீதிபதி உத்தரவு

0
357

(விசேட நிருபர்)

unnamed-1மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நொச்சிமுனைக்கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தரின் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று பிரேத பரிசோதனையை மேற் கொள்ளுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா பொலிசாருக்கு உத்தரவிட்டார்

(8.9.2016) இன்று வியாழக்கிழமை அதிகாலை மட்டக்களப்பு கல்லடி இசை நடனக்கல்லூரி வீதி நொச்சிமுனைக் கிராமத்திலுள்ள வீடொன்றில் கொலை செய்யப்பட்டவெள்ளத்தம்பி மகேஸ்வரன் (26) எனும் குடும்பஸ்தரின் சடலத்தை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா இன்று (8.9.2016) வியாழக்கிழமை பிற்பகள் ஸ்த்தளத்திற்கு சென்று பார்வையிட்டார்.

unnamed-2அத்தோடு மரண விசாரணையையும் மேற் கொண்ட நீதிபதி படுகொலை செய்யப்பட்ட வெள்ளத்தம்பி மகேஸ்வரனின் குடும்ப உறவினர்களை அழைத்து சடலத்தை அடையாளப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து அவரின் சகோதரன் மற்றும் சகோதரி ஆகிய இருவரும் சடலத்தை அடையாளப்படுத்தினர். இதையடுத்து பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பொலிஸ் தடவியல் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகரி கே.ரவி (ஐ.பி.)தலைமையிலான தடவியல் பொலிசார் அங்கு மேலதிக விசாரணையை மேற் கொண்டனர்

இப் படு கொலைச் சம்பவம் தொடர்பாக அவரது மனைவி மகேஸ்வரன் சிந்துஜா(26) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

unnamedநஞ்சருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மேற்படி மனைவியை காத்தான்குடி பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதுடன் இவர் தற்போது பொலிஸ் கண்கானிப்பில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் இவரிடம் விசாரணைகள் இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனா

LEAVE A REPLY