காத்தான்குடி பொலிஸ் பிரிவு குடும்பஸ்தரின் படு கொலை தொடர்பில் மனைவி கைது

0
163

(விசேட நிருபர்) 

Arrested-kkyமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நொச்சிமுனைக்கிராமத்தில் இடம் பெற்றுள்ள குடும்பஸ்தரின் படு கொலைச் சம்பவம் தொடர்பாக அவரது மனைவி சந்தேகத்தின் பேரில் இன்று (8.9.2016) கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

(8.9.2016) இன்று வியாழக்கிழமை அதிகாலை மட்டக்களப்பு கல்லடி இசை நடனக்கல்லூரி வீதி நொச்சிமுனைக் கிராமத்திலுள்ள வீடொன்றில் வெள்ளத்தம்பி மகேஸ்வரன்(26) எனும் குடும்பஸ்தர் வெட்டிக் கெலை செய்யப்பட்டுள்ள சம்வம் தொடர்பில் அவது மனைவி மகேஸ்வரன் சிந்துஜா(26) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நஞ்சருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மேற்படி மனைவியை காத்தான்குடி பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதுடன் இவர் தற்போது பொலிஸ் கண்கானிப்பில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் இவரிடம் விசாரணைகள் இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இக் கொலைச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆpயோரின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி நிசாந்த குணதிலகவின் தலைமையில் பொலிஸ் விசாரணை இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY