(Photo) காத்தான்குடியில் பழுதடைந்த வெதுப்பப்பட்ட ஆயிரம் கிலோ மாப்பண்டங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

0
30

(விசேட நிருபர்)

unnamed-19மட்டக்களப்பு காத்தான்குடியில் பழுதடைந்த வெதுப்ப பட்ட ஆயிரம் கிலோ மாப்பண்டங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொதுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து காத்தான்குடி இரண்டாம் குறிச்சி ஹக்குப்பிள்ளை வீதியில் வீடொன்றில (7.9.2016) நடாத்திய திடீர் சோதனை நடவடிக்கையின் போது இந்த பழுதடைந்த வெதுப்ப பட்ட மாப்பண்டங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த மாப்பண்டங்களை இந்த வீட்டில் இயந்திரத்தின் மூலம் அரைத்து ஒரு பேக்கரியொன்றுக்கு வழங்கி வந்துள்ளனர்.

இந்த மாப்பண்டம் பழுதடைந்து காணப்பட்டதுடன் இதில் பல்லி மற்றும் வண்டு பூச்சி போன்றவைகளும் காணப்பட்டுள்ளன.

unnamed-20இந்த வீட்டிலிருந்து சுமார் ஆயிரம் கிலோ வெதுப்ப பட்ட மாப்பண்டங்கள் கைப்பற்றப்பட்டு காத்தான்குடி நகர சபையின் வாகனத்தில் ஏற்றப்பட்டு அதை களஞ்சிநாலையில் வைத்திருப்பதாகவும் அதை அழிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இதை வைத்திருந்த வீட்டுரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் இவருக்கு எதிராக மட்டக்களப்பு நீதிமன்றில் சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

unnamed-21

unnamed-22

unnamed-23

unnamed-24

unnamed-25

unnamed-26

unnamed-27

unnamed-28

unnamed-28

unnamed-29

LEAVE A REPLY