ஹஜ் சட்ட மூலம் அறிமுகம் செய்யும் பிரேரணை மீண்டும் பாராளுமன்றத்துக்கு வருகிறது

0
162

hajj28ஹஜ் சம்பந்தமான தனியார் விசேட சட்ட மூலமொன்றை அறிமுகம் செய்யும் வகையில் கடந்த மே மாதம் முதலாம் வாரத்தில் வெள்ளிக்கிழமையன்று தனியார் பிரேரணையொன்றை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எச்.எம் சல்மான் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருந்தார் ; அன்றைய தினம் ஜூம்மாத் தொழுகைக்காக முஸ்லிம் எம்.பீமார்களும் முஸ்லிம் அலுவலர்களும் வெளியே சென்றிருந்த போது அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டதால் அன்று குறிப்பிட்ட சட்ட மூலத்தை சமர்பிக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து மீண்டும் அப்பிரறேனையை பாராளுமன்றத்தில் சமர்பிக்க சட்டத்தரணி சல்மான் எம்.பி முன் அறிவித்தல் கொடுத்துள்ளார்.

அப்பிரேரணையே எதிர்வரும் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீண்டும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுன்றது.

LEAVE A REPLY