பாகிஸ்தான் அணியிடம் இங்கிலாந்து தோல்வி

0
94

201609081123509409_pakistan-cruise-to-ruthless-nine-wicket-win_secvpfஇங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. ஒரு நாள் போட்டி தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. இரு அணிகள் மோதிய ஒரே ஒரு 20 ஓவர் போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் நடந்தது. டாஸ் ஜெயிக்க இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பாகிஸ்தானின் அபாரமான பந்து வீச்சில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்னே எடுத்தது. அதிக பட்சமாக ஹால்ஸ் 37 ரன் எடுத்தார். வகாப் ரியாஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி தொடக்கம் சிறப்பாக இருந்தது. தொடக்க வீரர்கள் சரிஜில்கான், லத்தீப் 11.1 ஓவரில் 107 ரன் சேர்த்தனர். சர்ஜில்கான் 59 ரன்னில் அவுட் ஆனார். அந்த அணி 14.5 ஓவரில் ஓடி விக்கெட்டுக்கு 109 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அபாரமாக பெற்று தொடரை கைப்பற்றியது.

LEAVE A REPLY