எகிப்து நாட்டில் ரெயில், பஸ் விபத்துக்களில் 27 பேர் பலி

0
143

201609080000152825_27-dead-in-egypt-bus-train-accidents-before-holiday_secvpfஎகிப்து நாட்டில் ஈத் அல் அதா என்ற திருவிழா வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது. இதையொட்டி அங்குள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.இதன் காரணமாக அந்த நாட்டின் பல பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

அதன் இடையே அங்குள்ள கிஸா பகுதியில் ஒரு ரெயில் தடம் புரண்டு, 3 பெட்டிகள் கவிழ்ந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த கிஸா பகுதிதான் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரமிடுகள் அமைந்த இடம்.இதேபோன்று வெதி எல் கெதித் மாகாணத்தில் ஒரு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 22 பேர் பலியாகினர்.

LEAVE A REPLY