பலஸ்தீனத்திற்கான இலங்கை பிரதிநிதி அன்வர் பெளசானிற்கும் பாலஸ்தீன முஸ்லிம் கலாச்சர அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு!

0
132

(அஹமட்இர்ஷாட்)

unnamed-17கடந்த 01.08.2016 மாதம் அன்று பலஸ்தீனத்திற்காக இலங்கை பிரதிநிதி அனவர். நெளசாத்திற்கு பாலஸ்தீன முஸ்லிம் கலாச்சார அமைச்சர் காமிஸ் அப்டாவிற்கும் இடையிலான சந்திப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாலஸ்தீன முஸ்லிம் கலாச்சரா அமைச்சின் செயலாளர் ஷெய்க் யூசுஃப் எடீஸ் மற்றும் இலங்கை பிரதிநிதி பெளசானின் பாலஸ்தீன காரியாலையத்திற்கான செயலாளர் நிகாட் இஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் இது வரைகாலமும் இஸ்ரேலிய இராணுவத்தினால் அழித்தொழிக்கபட்ட கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை புணர்நிர்மாணம் செய்வது பற்றி ஆராயப்பட்டதுடன் ஜெருஸலத்தில் வாழுகின்ற முஸ்லிம்களினுடைய அவல நிலைமைகள் சம்பந்தமாகவும் உரையாடப்பட்டது.

மேலும் இலங்கை மக்கள் பாலஸ்தீனத்திற்கு விஜயம் செய்து இஸ்ரேலியர்களினால் அழித்தொழிகப்பட்ட பாலஸ்தீனத்தினையும் ஜெரூசலத்தில் உள்ள கேந்திர கலாச்சார நிலையங்களையும் பார்வையிடுவதற்காக பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாசின் வேண்டுகோளினை பாலஸ்தீன அமைச்சர் இலங்கை பிரதிநிதி அன்வர் பெளசானிடம் தெரிவித்தார்.

பலஸ்தீன மக்களின் சுபீட்ச்சமான வாழ்விற்காக பிரார்திப்பாதாக தெரிவித்த பாலஸ்தீனத்திற்கான இலங்கை பிரதிநிதி அன்வர் பெளசான் மீண்டும் குறுகிய காலத்தில் இஸ்ரேலினால் அழித்தொழிக்கப்பட்ட பாலஸ்தீனம் புத்துயிர் பெறுவதற்கும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருந்து வருக்கின்ற உறவினை மேலும் பலப்படுத்தும் முகமாக இலங்கை ஜனாதிபதியும் இலங்கை அரசாங்கமும் தங்களது பங்களிப்பினை வழங்கதயாராக இருப்பதாக கூறினார்.

LEAVE A REPLY