மக்கா நகரில் ஹஜ் பெருநாளுக்கான ஆயத்த நிலையில் கால்நடைச் சந்தைகள்

0
257

(எம்.ஐ.அப்துல் நஸார்)

unnamed-6ஹஜ் கடமையில் மேற்கொள்ளப்படும் கால்நடைகளை அறுக்கும் அனுஷ்டானத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் சவூதி அரேபியா தயாராகி வருகிறது. கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு கால்நடைச் சந்தை ஸ்திரமாகமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுவாக ஆடு அல்லது செம்மறியாடுகள் உயரம், ஆரோக்கியம் மற்றும் வகை என்பனவற்றி;ன் அடிப்படையில் அவற்றின் விலைகள் 450 சவுதி றியால் தொடக்கம் 2,000 சவுதி றியால்கள் வரை வேறுபடும் என விவசாய அமைச்சும் ஜித்தா மாநகர சபையும் தெரிவித்துள்ளன.

உள்ளூர் அறிக்கையின் பிரகாரம், விநியோகத்தில் அதிகரிப்பு ஏற்பட்ட போதிலும், கடந்த இரண்டு மாதங்களாக செம்மறியாடுகளுக்கான கேள்வி குறைவடைந்து காணப்பட்டதாக கால்நடை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர், இதன் காரணமாக விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. ‘இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணம் வாடிக்கையாளர்கள் கொள்வனவில் ஆர்வம் காட்டாமை, புனித ரமழான் மாதம் மற்றும் பயணப் படுவகாலம் வந்தமை. இதன் விளைவாக ஈதுல் அழ்ஹாவின்போது நிலவும் உயர்ந்த அளவு கால்நடைகளுக்கான கேள்விக்கு போதிய அளவில் ஈடுசெய்யும் வகையில் அதிகரித்த கால்நடைவிநியோகம் அமையும், அத்துடன் விலைகள் ஸ்திரத் தன்மையில் இருப்பதற்கும் உதவும் ‘ என உள்ளூர் வர்த்தகரான அப்துல்லா தெரிவித்தார்.

‘விஷேட நிகழ்வுகளுக்காக மக்கள் அவசரமாக கால்நடைகளைக் கொள்வனவு செய்ய முயன்றாலும்கூட அவற்றின் விலைகள் மிக உயர்வானதாகக் காணப்படமாட்டாது’ என அப்துல்லா மேலும் தெரிவித்தார்.

அதேபோன்று மற்றுமொரு விற்பனையாளரான நாஸர் கருத்து வெளியிடுகையில் ‘ஈதுல் அழ்ஹா நெருங்கும்போது மிருகங்களின் விலை அதிகரிப்பதால் நாம் அதிக விலை கொடுத்தே அவற்றைக் கொள்வனவு செய்கின்றோம், நாம் இலாபத்தை பார்க்க வேண்டுமானால் அதிகரித்த விலைக்கே நாம் அவற்றை விற்பனை செய்வோம், ஆனால் இம்முறை, உள்ளூர் கேள்விக்கு ஈடுகொடுக்கும் வகையில் போதிய அளவில் விநியோகம் காணப்படுகின்றது. விலைகளும் ஸ்திரத் தன்மையுடன் காணப்படுகின்றன’ எனத் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், வௌ;வேறு வகையான செம்மறியாடுகளின் நிரம்பல் போதிய அளவில் காணப்பட்டாலும், ‘ஈதுல் அழ்ஹா நெருங்கும்போது செம்மறியாடு விற்பனையாளர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விலையினை அதிகரித்து விடுவார்கள் என்பது அங்கு வசிப்பவர்களின் கவலையாகும்.

‘விலைகள் தொடர்பில் இறுக்கத்தை கடைபிடிப்பதற்காக அதிகாரிகள் கண்டிப்பான மேற்பார்வையினையும், களப் பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும். திறந்த சந்தையாக இருந்தாலும் கூட நிர்ணயிக்கப்பட்ட விலையினத் தவிர, ஹஜ் கடமையின் உச்சபட்ச காலத்தில் அதிக விலையில் கால்நடைகளை விற்னை செய்வதற்கு அனுமதிக்கக கூடாது’ என ஜித்தாவில் வசிக்கும் ஹம்ஸா றகுமான் தெரிவித்தார்

அங்கு வசிக்கும் மக்கள் ஈதுல் அழ்ஹாவின்போது இலகுவில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் மாநகர சபை கால்நடைச் சந்தையிலும் கொல்களங்களிலும் அனைத்து வசதிகளையும் செய்துள்ளது.

இது தவிர, பாதுகாப்புத் தன்மை மற்றும் நோய்ப்பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பரீட்சிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட கொல்களங்களிலிருந்து தமக்குரிய இறைச்சியினையும், கால்நடைகளையும் கொள்வனவு செய்து, பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகர சபை குடியிருப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சுதந்திர விலங்கறுவையாளர்களினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மிருகப் பலி தொடர்பில் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளதோடு அவ்வறானவர்கள் கண்டுபிக்கப்பட்டாhல், அவர்கள் அதிக தண்டப்பணத்தைச் செலுத்த வேண்டிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY