தாக்குதல் நடத்துவதை விடுத்து சமூகத்தை முன்னேற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள் – மலேஷிய இணையதளம்

0
177

(எம்.ஐ.அப்துல் நஸார்)

thumb_Sri-Lankan-High-Commissioner-in-Malaysia_-Ibrahim-Sahib-Ansar_-was-beaten-up-by-local-Tamilsமதகுருமார் மீதும் இராஜதந்திரிகள் மீதும் தாக்குதல் நடத்துவதை விடுத்து சமூகத்தை முன்னேற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள் என மலேஷிய இணையதளம் காட்டமான அறிவுரை வழங்கியுள்ளது.

எப்.எம்.ரி என்ற இணையத் தளமே தாக்குதலில் இலங்கை இராஜதந்திரி மீது தாக்குதல் மேற்கொண்டோருக்கு இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளது. அதில் மேலும் தெரிக்கப்பட்டுள்ளதாவது,
உண்மையில், மலேஷியத் தமிழர்கள் முன்னுரிமை பெறுவதற்காக தவறான வழிமுறைகளைக் கையாண்டுள்ளனர்.

மனிதப் படுகொலையில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்துவது, அவரது கொடும்பாவியினை எரிப்பது என்பன ஒருபுறமிருக்க, சுமத்தப்படும் குற்றச்சாட்டில் எவ்வித சம்பந்தமும் இல்லாத மதகுருமார் மீதும் இராஜதந்திரிகள் மீதும் தாக்குதல் நடத்துவது அடிமட்ட முட்டாள்தனமானதாகும்.

முன்னாள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலேஷியாவுக்கு வருகைதந்தபோது புத்ரா உலக வர்த்தக மையத்தில் குழுமிய அரசியல்வாதிகள் உள்ளடங்கலான ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை இலங்கைக்குத் திருப்பி அனுப்புமாறு கோரியதோடு அவரது கொடும்பாவியினையும் எரித்தனர்.

தம்மை ‘நாம் தமிழர்கள்’ என அழைத்துக்கொள்ளும் அமைப்பைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் செந்துலில் அமைந்துள்ள பௌத்த விகாரையைச் சுற்றிவளைத்ததோடு ராஜபக்ஷ எங்கிருக்கிறார் என தெரிவிக்குமாறு வற்புறுத்தினர். அதுமட்டுமன்றி அந்த விகாரையின் விகாராதிபதி சாரண தேரரையும் தாக்கினர்.

அப்போதும் அவர்கள் கோபம் அடங்கவில்லை. கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ஒரு குழுவினர் இலங்கையின் உயர் ஸ்தானிகர் இப்றாஹீம் ஸாஹிப் அன்சார் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.

தற்போது தாக்குதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஐகது செய்யப்பட்ட ஐந்து பேரையும் விடுவிப்பதற்காக நிதி சேகரிப்புக்கான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ராஜபக்ஷவின் செயற்பாடுகளில் எவ்வித சம்பந்தமும் இல்லாத சாரண தேரரையும் இப்றாஹீம் ஸாஹிபையும் தாக்கியதன் மூலம் இந்தக் காடையர்கள் அடைய நினைப்பது என்ன?

ராஜபக்ஷ யார் என்பதும், எதற்காக அங்கு சிவில் யுத்தம் நடைபெற்றதென்பதும், ராஜபக்ஷ பாவிக்கு வருவதற்கு முன்னதாகவே யுத்தம் ஆரம்பமாகி நடந்துகொண்டிருந்தது என்பதும் இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்ட எத்தனை பேருக்குத் தெரியும் ?

அங்குள்ள தமிழர்கள் கொல்லப்படுவததைத் தடுக்க அவர் எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்;டு இருந்தலும் கூட அவருடன் எந்தத் தொடர்பும் இல்லதவர்கள்மீது ‘யுத்தக் குற்றவாளிகளாகக் கருதி’ தாக்குதல் மேற்கோள்வது எந்த வகையில் அறிவுடமையானது. மலேஷிய இந்தியர்களாகிய எங்களுக்கு கையாளவேண்டிய எத்தனையோ பிரச்சினைகள் ஏற்கவே இங்கு இருக்கிறதல்லவா?

இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் எண்மையில் ஆத்திரப்பட வேண்டிய மலேஷியாவிலுள்ள இலங்கைத் தமிழ் சமூகம் இந்தப் போராட்டத்தில் பங்குபற்றவில்லை. தமது நாட்டில் போதிய அளவு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்டுகின்றன என்பது அவர்களுக்குத் தெரியும். அந்த சமூகத்தைச் சார்ந்த தொழிலதிபர்கள் முக்கிய பிரமுகர்கள் இங்கு இருக்கின்றனர்.

முட்டாள்தனமான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் இந்திய வம்சாவழி அரசியல்வாதிகள் முன்னணியில் இருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகின்றது. குழுக்களை ஒன்று சேர்த்து மோசமான வார்த்தைகளைப் பிரயோகித்து கோஷமெழுப்பிய பின்னர் வன்முறை தலைதூக்கியதும் தம்மை தூரப்படுத்திக்கொண்டார்கள். இது பொறுப்பற்ற செயற்பாடாகும்.

மலேஷிய இந்தியர்கள் தமது சக்தியினை தமது சமூகம் கௌரவமான நிலையினை அடைவதற்கு முயற்சிப்பதற்காகப் பயன்படுத்த வேண்டும். தங்களது மொழியையும் கலாச்சாரத்தையும் நன்கு கற்றுக்கொள்ள முயற்சிக்கவேண்டுமேயன்றி ஒருவரையொருவர் வெட்டிக்கொல்ல முயற்சிக்கக் கூடாது.

LEAVE A REPLY