மலேசியா பெற்றோனாஸ் பல்கலைக்கழகத்துக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்ல்லாஹ் விஜயம்

0
114

unnamed-1மலேசியா பேராக் மாநிலத்துக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் தலைவரும், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் நேற்று புதன்கிழமை மலேசியா பெற்றோனாஸ் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தார்.

இவ் விஜயத்தின் போது பெற்றோனாஸ் பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப, கட்டிட, நவீன கல்விக் கூட வசதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர், இவ்வசதிகளை ரிதிதென்னை பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கும் பெற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகளை பெற்றுக் கொண்டார்.

unnamed-2இந்நிகழ்வில் பெற்றோனாஸ் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகள், மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று அதிகாரி பொறியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உற்பட பல்கலைக்கழக அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

இதன் போது பெற்றோனாஸ் பல்கலைக்கழகத்தினால் இராஜாங்க அமைச்சர் அவர்களுக்கு விசேட வரவேற்பும், விருந்தும் வழங்கி கௌரவிக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

unnamed-4

unnamed-5

LEAVE A REPLY