ஊடகவியலாளர் லசந்தவின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுக்க அனுமதி

0
169

lasantha-wikramathungeஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தை தோண்டி எடுக்க கல்கிசை நீதவான் அனுமதியளித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, கல்கிசை நீதவான் முஹமட் சகாப்தீன் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

லசந்தவின் மரணத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை தொடர்பில் சந்தேகத்துக்குரிய தகவல்கள் 21 உள்ளதாக சட்ட வைத்திய அதிகாரிகள் சபையால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதவான், செப்டம்பர் 27ம் திகதி லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுக்க அனுமதியளித்துள்ளார்.

#Adaderana

LEAVE A REPLY