முஸ்லிம் சேவையில் ‘வரலாற்றில் ஓர் ஏடு’ நிகழ்ச்சியை நான் கேட்காமல் தூங்குவது கிடையாது: நீதிபதி எம்.கணேசராஜா

0
455

(விஷேட நிருபர்)

judge-ganesarajaஇலங்கை வாணொலி முஸ்லிம் சேவையில் மௌலவி புகாரி அவர்களின் “வரலாற்றில் ஓர் ஏடு” எனும் நிகழ்ச்சியை நான் கேட்காமல் தூங்குவது கிடையாது என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (06) செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பில் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் நடாத்திய 7வது தமிழியல் விருது வழங்கும் விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தொடர்ந்துரையாற்றிய நீதிபதி கணேசராஜா,

“இலங்கை வாணொலி முஸ்லிம் சேவையில் மௌலவி புகாரி அவர்களின் வரலாற்றில் ஓர் ஏடு எனும் நிகழ்ச்சியை நான் தினந்தோறும் கேட்பேன்.

இன்று இந்த வைபவத்தில் மௌலவி புகாரி அவர்கள் உரையாற்றும் போது தனது வரலாற்றில் ஓர் ஏடு நிகழ்ச்சியைக் கேட்ட பல தமிழ் சகோதரர்கள் எனக்கு வாழ்த்தி பல கடிதங்களை அனுப்பியதாக தெரிவித்தார்.

இலங்கை வாணொலி முஸ்லிம் சேவையில் மௌலவி புகாரி அவர்களின் வரலாற்றில் ஓர் ஏடு எனும் நிகழ்ச்சியை நானும் கேட்பதுண்டு. நிகழ்ச்சியை நான் கேட்காமல் தூங்குவது கிடையாது. அப்போது இவர் யார் எனத்தெரியாது.

மௌலவி புகாரி அவர்கள் கூறியது போல, இன ஒற்றுமைக்கு இந்த தமிழியல் விருது விழா ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்கள் இதில் கௌரவிக்கப்படுவது இந்த நிகழ்வுக்கு மேலும் மெருகூட்டச் செய்கின்றது. இதன் ஏற்பாட்டாளர் ஓ.கே.குணநாதன் அவர்களை பாராட்டுகின்றேன்.

இளைஞர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கம் அருகி விட்டது. இன்று வாசிப்பதற்கு கூட நேரமில்லாமல் மோட்டார் சைக்கிளிலும் தொலைபேசிகளிலும் தங்களுடைய வாழக்கையை இளைஞர்கள் செலவளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எமது நீதிமன்றிற்கு வரும் இளைஞர்களில் அனேகமானவர்கள் பாடசாலை மற்றும் பலக்லைக்கழகங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.

இல்லையென்றால் பாடசாலையை விட்டு விலகி ஒரு தொழில் இல்லாமல் போதை வஸ்துக்கு அடிமையாகி தங்களது வாழக்கையை வீணடித்துக் கொண்டிருக்கின்ற இளைஞர்களை காணும் ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது. வாசிப்பு கழக்கம் என்பது இந்தக்காலத்தில் அருகி விட்டது” என்றார்.

LEAVE A REPLY