(Crime News) நொச்சிமுனை பகுதியில் கணவன் வெட்டி கொலை: மனைவி நஞ்சருந்திய நிலையில் மட்டு வைத்தியசாலையில்..!

0
61

(முஹம்மட் பயாஸ்)

whatsapp-image-2016-09-08-at-09-47-55காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட நொச்சிமுனை இசை நடனக்கல்லூரி வீதியில் உள்ள குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (08) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் அறிய வருவதாவது,

கொத்தியாபுலையைச் சேர்ந்த வெள்ளைத்தம்பி மகேஸ்வரன் என்பவரும் வன்னியைச் சேர்ந்த சிந்து என்பவரும் கணவன் மனைவி ஆவர். இருவரும் நொச்சிமுனை பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

இதன் போது கணவன் மகேஸ்வரன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மனைவி சிந்து நஞ்சருந்திய நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி இருவரும் 26 வயதுடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் கணவன் மனைவிக்கிடையிலான குடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகதர தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

whatsapp-image-2016-09-08-at-09-47-51 whatsapp-image-2016-09-08-at-09-47-52 whatsapp-image-2016-09-08-at-09-47-53 whatsapp-image-2016-09-08-at-09-47-54

LEAVE A REPLY