(Photos) காத்தான்குடியில் லொரி விபத்து: இருவர் காயம்; மின்சாரமும் துண்டிப்பு

0
128

whatsapp-image-2016-09-08-at-02-22-23மட்டக்களப்பை நோக்கி அரிசி ஏற்றி சென்று கொண்டிருந்த கல்முனை-சாய்ந்தமருது லொறி ஒன்று இன்று (08) அதிகாலை கல்முனை பிரதானவீதி காத்தான்குடி மஞ்சந்தொடுவாய் எல்லைப்பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

மஞ்சந்தொடுவாய் ஜாமிஉழ் கர்ணி பள்ளிவாயலுக்கு முன்பாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வேகமாக வந்துகொண்டிருந்த குறித்த லொறி அதிவலு கொண்ட மின்கணுவுடன் மோதுண்டதுடன் கூரை ஓடுகளை இறக்கிக்கொண்டிருந்த மற்றுமொரு லொறியின் பின்புறமாகவும் முட்டியதில் அந்த லொறிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது பாதுகாப்பு காரணங்களுக்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக காத்தான்குடி மின் பொறியியலாளர் நௌபல் தெரிவித்தார்.

இதன் காரணமாக காத்தான்குடி மின் பொறியியலாளர் பிரிவில் சிறிது நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாரதியும் வழிநடத்துனரும் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

whatsapp-image-2016-09-08-at-07-18-10 whatsapp-image-2016-09-08-at-07-18-06 whatsapp-image-2016-09-08-at-07-18-03 whatsapp-image-2016-09-08-at-07-17-59 whatsapp-image-2016-09-08-at-07-17-57 whatsapp-image-2016-09-08-at-02-23-01 whatsapp-image-2016-09-08-at-02-22-57 whatsapp-image-2016-09-08-at-02-22-57-1

LEAVE A REPLY