மாவட்ட ஒருங்கினைப்பு குழு கூட்டம்

0
114

(எம்.ஜே.எம்.சஜீத்)

unnamed (2)அம்பாறை மாவட்டத்தில் வாழ்கின்ற மூவின மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் அனைத்து திணைக்களத் தலைவர்களும் ஒன்றினைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றும் தன்னை அம்பாறை மாவட்ட ஒருங்கினைப்பு குழு இணை தலைவராக நியமித்த ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேன அவர்களுக்கும் தன்னை சிபாரிசு செய்த முன்னால் அமைச்சர் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்க்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கிழக்கு மாகாண எதிர்கட்சி தலைவரும் அம்பாறை மாவட்ட ஒருங்கினைப்பு குழு இனைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட ஒருங்கினைப்பு குழு கூட்டம் இனைத்தலைவர்களான அமைச்சர் டயாகமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர்,றொபின், மற்றும் கிழக்கு மாகாண எதிர்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோரின் தலைமையில் 2016.09.07 இன்று அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது இனைத்தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது 2015 ஆம் ஆண்டில் நடைமுறை படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் 2016 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள குடிநீர் வசதி, வீதி அபிவிருத்தி ,அனைவருக்கும் மின்சாரம், சுகாதார சேவைகள் உற்பட பலவேறு விடயங்கள் பற்றி ஆராயப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் துசித பீ வனிகசிங்க , அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ,கிழக்கு மாகாண சபை அமைச்சர், உறுப்பினர்கள் மற்றும் தினைகளத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY