மஹாவ நோக்கி சென்ற ரயிலுடன் மோதி எச்.அன்வர் படுகாயம்

0
103

(அப்துல்சலாம் யாசீம்)

Train Accidentதிருகோணமலையிலிருந்து மஹாவ நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் இன்று (07) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர் சீனக்குடா-லகி விஜயரத்ன மாவத்தையைச்சேர்ந்த எச்.அன்வர் (38 வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த நபர் சீனக்குடா புகையிரத நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதாகவும் புகையிரத நிலைய அதிகாரிகளினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்பாக சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY