கனடா கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த தாய், மகள் பலி

0
132

canada-tamilefamileகனடாவின் ஒன்றாரியோவில் இடம்பெற்ற வீதிவிபத்தொன்றில் இலங்கை வம்சாவளி தாய் ஒருவரும் அவரின் 4 வயது மகளும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் பயணித்த காருடன், மாற்று திசையில் இருந்து வந்த கார் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து சம்பவத்தில் 40 வயதான இனோகா அத்துரலியே லியனகேவாதுகே என்ற தாயும் சாவனி என்ற 4 வயதுடைய அவரது மகளுமே உயிரிழந்துள்ளனர். இவர்கள் 10 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, மற்றைய காரில் பயணித்த 28 வயதான நபரும் ஐந்தரை மாதங்களான குழந்தையும் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

-VK-

LEAVE A REPLY