பதற்றமாக நாடுகளில் இருந்து 5 கோடி குழந்தைகள் உலகம் முழுவதும் அகதிகளாக தஞ்சம்: யுனிசெப்

0
127

201609071945084642_Nearly-50-Million-Kids-Displaced-From-Crisis-Countries_SECVPFசிரியா, ஈராக் உள்ளிட்ட போர் பதற்றம் நிறைந்த நாடுகளில் இருந்து மக்கள் அகதிகளாக மேற்கு உலக நாடுகளுக்கு தஞ்சம் கேட்டு சென்ற வண்ணம் உள்ளனர்.

குறிப்பாக, சிரியாவில் நடைபெற்று உள்நாட்டுப் போரால் அந்நாட்டவர்கள் அடைக்கலம் தேடி அருகில் உள்ள நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இதில் சிரியாவின் கொம்பானி பகுதியைச் சேர்ந்த அப்துல்லா குர்தி, தன் குடும்பத்தாரைக் காப்பாற்றும் நோக்கில் சிரியாவை விட்டு தன் மனைவி ரெஹான், இரு மகன்கள் காலிப் மற்றும் அய்லான் ஆகியோருடன் அடைக்கலம் தேடி கனடா சென்றார், ஆனால் அங்கு அப்துல்லா குர்திக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இதனையடுத்து கிரீஸ் நாட்டுக்கு படகில் பயணம் மேற்கொண்டார். பாதுகாப்பற்ற கடல் பயணத்தை மேற்கொண்டபோது ராட்சத அலைகளில் படகு சிக்கியதில், தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளையும் இழந்தார். இதில் அவரின் இரண்டாவது மகனான மூன்று வயது அய்லான் குர்தியின் உடல் கடற்கரையில் கிடந்தது. அதுவும் அய்லானின் முகம் மண்ணில் புதைந்த நிலையில் காணப்பட்ட காட்சி உலகையே அதிர்ச்சி அடையச் செய்தது.

இந்நிலையில், யுனிசெப் எனும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதி அமைப்பானது பதற்றம் நிறைந்த நாடுகளில் இருந்து சுமார் 5 கோடி குழந்தைகள் உலகம் முழுவதும் அகதிகளாக இடமாற்றம் ஆகியுள்ளதாக கூறியுள்ளது.

இதுகுறித்து யுனிசெப் செயல் இயக்குநர் அந்தோனி லேக் தமது அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

குழந்தைகளின் துயரமான முகங்கள் உலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஒரு குழந்தையின் படமும் லட்சக்கணக்கான குழந்தைகள் பேராபத்தில் உள்ளதை வெளிப்படுத்துகிறது. மேலும் நம்முடைய உதவி அவர்களுக்கு தேவை என்பதையும் உணர்த்துகிறது.

2.8 கோடி குழந்தைகள் வன்முறை போர் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக வெளியேறி உள்ளனர். 1.7 கோடி பேர் சொந்த நாட்டிற்குள்ளே உதவிகள் எதுவும் கிடைக்காமல் அகதிகளாக இடம் மாறுகின்றனர்.

வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 2 கோடி குழந்தைகள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறுகின்றனர். மொத்தமாக 10 கோடி குழந்தைகள் இவ்வாறு வீடுகளை, நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY