இலங்கை மின்சார சபையின் ஏறாவூர் செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலைய பிரிவில் வியாழனன்று பகல்நேர மின்வெட்டு

0
160

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

unnamed (12)பராமரிப்புப் பணிகள் காரணமாக இலங்கை மின்சார சபையின் ஏறாவூர் செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலைய பிரிவில் வியாழக்கிழமை (08.09.2016) காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு பொறியியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி ஏறாவூர் 4ஆம் 5ஆம் குறிச்சிகள், செங்கலடி, கொம்மாதுறை, பலாச்சோலை களுவன்கேணி, பேசும்கிராமம், வந்தாறுமூலை, மாவடிவெம்பு, ஆகிய ஊர்கள் முழுவதுமாக இந்த மின் துண்டிப்பு நடைமுறையில் இருக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் ஏற்ற மாற்று முன்னேற்பாட்டு ஒழுங்குகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

LEAVE A REPLY