டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன்: கிறிஸ்கெய்ல்

0
93

201609071042300303_West-Indian-opener-Chris-Gayle-hopeful-of-playing-Test_SECVPFஉலகின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல். வெஸ்ட் இண்டிசை சேர்ந்த இவர் 20 ஓவர் போட்டியில் பந்து வீச்சாளர்களை கலங்கடித்து வருகிறார்.

36 வயதான கிறிஸ்கெய்ல் 20 ஓவர் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு டெஸ்டிலும். 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு ஒருநாள் போட்டியிலும் அவர் விளையாடவில்லை.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டியை பிரபலப்படுத்துவதற்காக கிறிஸ்கெய்ல் சென்னை வந்துள்ளார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி ரன்களை குவிக்கும் வீரர் 20 ஓவர் போட்டிக்கு ஏற்ற வகையில் இருப்பார். சரியான முறையில் ஷாட்களை தேர்வு செய்வார். உதாரணத்துக்கு ஜெயவர்த்தனே சிறந்த டெஸ்ட் வீரர். 20 ஓவர் போட்டியிலும் அவர் அபாரமாக ஆடியவர். மனநிலையில்தான் வேறுபாடு இருக்கிறது. விளையாட்டில் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

என்னால் மீண்டும் டெஸ்டில் விளையாட முடியும். டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இடம் பெறுவேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

ராகுலின் பேட்டிங் ஸ்டைல் நேர்த்தியாக இருக்கிறது. டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் ஆகிய 3 நிலைகளிலும் அவர் வெற்றிகரமாக பேட்டிங் செய்கிறார். அவர் ஒரு சிறந்த பேட்ஸ் மேனாக ஜொலிக்கிறார். தனது ஆட்டத் திறனை அவர் ஏற்கனவே நிரூபித்து விட்டார்.

இவ்வாறு கிறிஸ்கெய்ல் கூறியுள்ளார்.

அவர் 103 டெஸ்டில் விளையாடி 7,214 ரன் எடுத்துள்ளார். சராசரி 42.18 ஆகும். 15 சதமும், 37 அரை சதமும் அடித்துள்ளார்.

LEAVE A REPLY