இணையதளங்களில் தாங்கள் தெரிவித்ததாக வெளியான செய்திக்கும் தங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை: இரு மாகாண சபை உறுப்பினர்களும் மறுப்பு

0
42

(MJM.Sajeeth)

unnamed (11)எதிர்க்கட்சி ஆசனத்திற்கு தூக்கி வீசப்பட்ட உதுமாலெப்பையினால் பொய்யான அறிக்கை மாத்திரமே விடமுடியும் என இணையதளங்களில் தாங்கள் தெரிவித்ததாக வெளியான செய்திக்கும் தங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.அன்வர் மற்றும் சட்டத்தரணி ஏ.எம்.லாஹிர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இன்று (06) இணையதளங்களில் மாகாண சபை உறுப்பினர்களின் பெயரில் வெளியான செய்தி குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மாகாண சபை உறுப்பினர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இச் செய்தி தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அன்வர் மறுப்புத் தெரிவிக்கையில்…

கிழக்குமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பைக்கெதிராகவும் அவரை கீழ்த்தரப் படுத்துவது போன்றதுமான ஒரு அறிக்கையை என்னால் வாசிக்க கிடைத்ததுஇ அப்படி ஊடகங்களிடமும் ஊடகவியலாளர்களிடம் சபையிலும் பேசவில்லை என்று கவலையுடன் கருத்து தெரிவித்தார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர்.

இன்று இணைய ஊடகங்களில் உலாவிய இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் இதனை உடனடியாக நீக்கிவிடுமாறும் இனையதள உரிமையாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளதகாவும் அவர் சற்று முன்னர் தெரிவித்தார். அச் செய்தியினை அனுப்பிய ஊடகவியலாளர்கள் பக்கச்சார்பாக நடந்து கொள்வதாகவும் தன்னுடைய பெயரை களங்கப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச் செய்தி தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.லாஹிர் மறுப்புத் தெரிவிக்கையில்…

இன்று எனது பெயரில் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பைக்கு எதிராக வெளிவந்த செய்திக்கும் எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை. இச்செயற்பாடானது எனது நற்பெயருக்கும் தனிப்பட்ட கௌரவத்துக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலே மேற்கொள்ளப்பட்ட சதிமுயற்சியாகும்.

குறித்த செய்தியில் வெளியான விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களிடமோ, எந்தவொரு கூட்டத்திலோ என்னால் பேசப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY