விவேகானந்த வித்தியாலயத்தின் தேவைகளை கண்டறியும் நோக்குடன் ஷிப்லி பாறூக் திடீர் விஜயம்

0
96

unnamed (7)மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குற்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தின் தேவைகளை கண்டறியும் நோக்குடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் 05.09.2016ஆம் திகதி பாடசாலைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களை சந்தித்து பாடசாலையின் அபிவிருத்தி, மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள், மற்றும் பல தேவைகளை கேட்டறிந்துகொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அதற்கான சில உதவிகளை கிழக்கு மாகாண சபையினூடாக பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

unnamed (10)கா.பொ.த. சாதாரண தரம் வரை காணப்படும் இப்பாடசாலை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினுள் உள்ள வளப்பற்றாக்குறை மிகுந்த பாடசாலைகளுள் ஒன்றாகும். 21 ஆசிரியர்கள் கற்பிற்பதற்குரிய இடமிருந்தும் தற்போது இப்பாடசாலையில் 13 ஆசிரியர்களே சேவையில் உள்ளனர். கணிதம், விஞ்ஞானம், சுகாதாரம், தகலவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், சமயம் மற்றும் கலை ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லாத நிலையில் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே கல்வி கற்று வருகின்றனர். அதிபர் அலுவலகம் தவிர்ந்த ஏனைய வகுப்பறைகளில் மின்சார வசதிகள் ஏதுவும் இல்லாத இப்பாடசாலையில் தற்போது இரவுநேர வகுப்புகள் இடம் பெற்றும் வருகின்றது.

மேலும் இப்பாடசாலைக்கு செல்லும் வீதியானது மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுவதோடு கல்வி கற்றும் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆகியோர் மழைக் காலங்களில் இவ்வீதியால் பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலையில் பல இன்னல்களையும், துயரங்களையும் சந்தித்து வருகின்றனர். மேலும் விபத்துக்கள் நடக்கக்கூடிய வகையில் இவ்வீதி மிகவும் உடைந்த நிலையிலும் காணப்படுகின்றது.

unnamed (8)இப்படசாலையில் வளபற்றாக்குறைகள் அதிகம் உள்ளபோதிலும் கல்வி, விளையாட்டு, கலை மற்றும் இலக்கியம் என பல்வேறு துறைகளிலும் சிறந்த பெறுபேறுகளை வழங்கி வருகின்றது. 2016ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் இப்பாடசாலை மாணவர் ஒருவர் முதலிடம் பெற்றதோடு அகில இலங்கை சமூக கல்வி போட்டியில் இப்பாடசாலை மாணவர் 3ஆம் இடத்தினையும் பெற்றார். மேலும் கடந்த கால கா.பொ.த. சாதாரண தர பரீட்சைகளில் இப்பாடசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இப்பாடசாலை தொடர்பான பல்வேறு விடயங்களை கேட்டறிந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் எதிர்வரும் வருடத்திற்கான தனது மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாடசாலையின் தேவைகள் தொடர்பாக கவனம் செலுத்துவதற்கும் உரிய அதிகாரிகளினூடாக ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததோடு வீதி அபிவிருத்திக்கான முயற்சிகளை மேற்கொள்ளவதற்கும் வாக்குறுதியளித்தார்.

நகர்புற பாடசாலை மாணவர்களை போன்று பல்வேறு வசதிகள் இல்லாத இவ்வாறான பாடசாலைகளில் கல்வி கற்கும் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள என்ற இன மத பாகுபாடில்லாமல் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்காக தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மிகவும் கறிசனை காட்டிவரும் நபராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் காணப்படுகின்றார்.

LEAVE A REPLY