இலங்கையின் முதல் தடவையாக சர்வதேச சுனாமி ஒத்திகை

0
95

(அப்துல்சலாம் யாசீம்-)

unnamed (4)இலங்கையின் முதல் தடவையாக நடாத்தப்படுகின்ற சர்வதேச சுனாமி ஒத்திகை நிகழ்வின் திருகோணமலை மாவட்ட நிகழ்வு இன்று 907) வெறுகல் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட இலங்கைத்துறை முகத்துவாரம் கிராம சேவையாளர் பிரிவில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் விறாஜ் திஸாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ஒத்திகை நிகழ்வில் வெறுகல் பிரதேச செயலாளர் எம்.தயாபரன் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர் டாக்டர் ரவிச்சந்திரன் -கன்தளாய் பிரதேசத்திற்குப்பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ஹேமசிறி -சேறுநுவர பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த குமார- மற்றும் முற்படைகளின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

unnamed (5)இதன் போது சுனாமி கோபுரத்திலிருந்து எச்சரிக்கை ஓசை கேட்வுடன் மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டுமெனவும் அங்கு விழிப்புணர்வாக காண்பிக்கப்பட்டது.

இவ்வணர்த்தத்தின் போது காயம்-மற்றும் விபத்துக்களின் போது மக்களுக்கு எவ்வாறு இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் தொண்டு சேவைகளை வழங்குகின்றது பற்றியும் மக்களுக்கு தௌிவூட்டப்பட்டது.

இதேவேளை பாதிக்கப்பட்ட பின்னர் பிரதேச செயலக அதிகாரிகள் எவ்வாறு மக்களுடன் செயற்பட வேண்டும்.செயற்படுகின்றார்கள் எனவும் மக்களுக்கு தௌிவூட்டப்பட்டது.

LEAVE A REPLY