மலேசியா பிரபல பல்கலைக்கழகத்துடன் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் ஒப்பந்தம்

0
94
unnamed (1)மலேசியாவின் மிகப்பெரும் பல்கலைக்கழகமான ஸுல்தான் அஸ்லான் ஷா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை கைச்சாத்திடப்பட்டது.
மலேசியாவின் பேராக் மாநிலத்தின் தலைநகர் ஈப்போவில்  அமைந்துள்ள அம்ஜேயா மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்,புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் ஹிராஸ்  ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இந்நிகழ்வில், மலேசியா பேராக் மாநில முதலமைச்சர் சாம்பிரி அப்துல் காதிர், மலேசியா கல்விஅமைச்சர் மஹ்ஷிர் ஹாலித், இலங்கையின் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஸுல்தான் அஸ்லான் ஷ பல்கலைக்கழகம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.
unnamed (2)

LEAVE A REPLY