திருகோணமலையில் காணாமற் போனதாக கூறப்பட்ட வர்த்தகர் பொலீசிடம் சிக்கினார்

0
182

fdfd

(அப்துல் சலாம் யாசீம்)

பண்டாரகம பகுதியைச்சேர்ந்த எம்.எச்.நஸ்ரின் (36வயது) கடந்த 04ம் திகதி காணாமல் போனதாக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அம்முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த தலைமையக பொலிஸார் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நபரை நேற்றிரவு (06) ஹதுமுல்ல பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை நகரில் கடந்த 04ம் திகதி வங்கியொன்றுக்கு ஏல விற்பனைக்காக ஒரு கோடி ரூபாய் பணத்துடன் காணாமல் போனவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
அட்டுலுகம பகுதியில் ஏல விற்பனையில் நகைகளை வாங்கிக்கொண்டு வருவதாக பலரிம் பணத்தினை வாங்கி வந்து தன்னை பணத்துடன் கடத்தியதாக மக்களை நம்ப வைப்பதற்காகவே தான் சென்றதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
நண்பர்களுடன் திருகோணமலை வந்தவர் வங்கிக்கு வெளியில் குடிநீர் எடுத்துவிட்டு வருகின்றேன் என கூறிச்சென்றவரே பணத்தையும் எடுத்துச்சென்றுள்ளார்.
அவரை கடத்திருக்கலாம் என உறவினர்கள் சந்தேகங்களை வெளிப்படுத்திய போதிலும் பொலிஸார் இவருடைய தொலைபேசியை வைத்து தொழிநுட்பத்தை பயன்படுத்தி வவுனியா பஸ்ஸில் நுவரெலியா செல்லும் போது இவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை இன்று திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

#News1st

LEAVE A REPLY