சாதனையுடன் போட்டியை வென்றது அவுஸ்திரேலியா

0
63

CRICKET-SRI-AUS-T20இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 85 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி மூன்று விக்கட் இழப்புக்கு 263 ஓட்டங்களைப் பெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

அதன்படி, அவுஸ்திரேலிய அணி சார்பாக ஆட்டமிழக்காமல் மெக்ஸ்வெல் 145 ஓட்டங்களையும், ஹெட் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலிய அணி பெற்றுக்கொண்ட இந்த ஓட்ட எண்ணிக்கை சர்வதேச இருபதுக்கு இருபது போட்டி ஒன்றில் அணி ஒன்று பெற்றுக் கொண்ட அதிக ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.

முன்னதாக கடந்த 2007ம் ஆண்டு 6 விக்கட்ட இழப்பிற்கு 260 ஓட்டங்களை பெற்ற இலங்கை அணியின் சாதனை இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 264 ஓட்டங்களை நோக்கி களம் இறங்கிய இலங்கை 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அணி சார்பாக அதிக பட்சமாக தினேஷ் சந்திமால் 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

LEAVE A REPLY