கெப் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் படுகாயம்

0
152

(அப்துல் சலாம் யாசீம்)

accident0ஹொரவ்பொத்தான-வவுனியா பிரதான வீதியில் இன்று (07) அதிகாலை கெப் வாகனமொன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 17 பேர் படுகாயமடைந்த நிலையில் ஹொரவ்பொத்தான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு விபத்தில் காயமடைந்தவரகள் திருகோணமலை-மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் 09 ஆண்களும் 04 பெண்களும் 04 சிறுவர்கள் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது கெப்பித்திகொல்லாவ நகரில் நேற்றிரவு இசை நிகழ்ச்சிக்கு சென்று இன்று அதிகாலை வந்து கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

விபத்தில் காயமடைந்த 17 பேரில் தற்போது 10 பேர்களை மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை ஹொரவ்பொத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY