மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் கல்விச் சமூகத்தால் என்றும் நினைவு கூறப்பட வேன்டியவர் பிரதி அமைச்சர் MSS. அமீர் அலி: VTM. முபாறக் JP

0
318

(ஜுனைட்.எம்.பஹ்த்)

Ameer Ali 01மட்டக்களப்பு கல்வி வலயம் பிரிக்கப்படாமல் ஒன்றினைந்திருந்த காலத்தில் முஸ்லிம்களுக்கென தனியான கல்வி வலயத்தினை அமைப்பதற்கு காரண கர்த்தாவாக இருந்தவர்கள் தமிழ் அரசியல் பிரமுகர்களே தமக்கு வேண்டிய அதிகாரிகளை மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு நியமித்து அவர்களது நிகழ்ச்சி நிரலுக்கு கீழ் மட்டக்களப்பு கல்வி வலயம் பக்கச்சார்போடு இயங்க தொடங்கியது.

இதனால் முஸ்லீம் சமூகம் பல்வேறு தகுதிகள் இருந்த போதும் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு வந்தனர்.

அது மாத்திரமன்றி நிருவாக ரீதியான செயற்பாடுகளில் இனம் சார்ந்த அதிகாரிகளும் அதிபர்களும், ஆசிரியர்களுமே நன்மை அடைந்து வந்ததுடன் அதிகமாக அதிபர்களும், ஆசிரியர்களும் புறக்கணிப்பு செய்யப்பட்டதுடன் வளப்பங்கீடுகளிலும் அநீதி இளைக்கப்பட்டது.

இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம் கல்விச் சமூகத்தை பாதுகாத்து கொள்வதற்கும் வீழ்ச்சியடைந்து போய் இருந்த மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் கல்விச் சமூகத்தின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து முஸ்லிம் பாடசாலைகளும், பிரதேச கல்வி அலுவலகங்களும் பிரித்தெடுக்கப்பட்டு முஸ்களுக்கான ஒரு தனி கல்வி வலயமாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் நிறுவப்பட்டது. அக்காலத்தில் மிக தைரியத்துடன் தனிக் கல்வி வலயத்தை ஸ்தாபித்து தந்தவர் பிரதி அமைச்சர் MSS. அமீர் அலி அவர்களே என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை இதன் போது கிழக்கில் பலம்
பொருந்திய இரு தலைவர்களை நாம் காண முடிகின்றது ஒருவர் முன்னால் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ALM. அதாவுல்லாஹ் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு தனியாக கிழக்கு வேறாக, வடக்கு வேறாக பிரிக்கப்படவேண்டும் என்று குரல் கொடுத்தவர் அமைச்சர் அதாவுல்லாஹ்.

இக் கோரிக்கையின் மூலம் தமிழ் தலைவர்களாலும் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி என தம்மை தாமே பறை சாற்றிக்கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கூட சாத்திய மற்ற பேச்சுக்களை வெறும் வாய் கோசங்களாக பேசுவதில் பயனில்லை. இது வெறும் வெற்றுக் கோசங்கள் என விமர்சிக்கப்பட்ட போதிலும் வடக்கு கிழக்கு வேறு வேறாக பிரிக்கப்பட்டது எனும் நீதி மன்ற தீர்ப்பு வெளியானதும் பல இன தலைவர்கள் அதிர்ந்து போனது வரலாறு.

அது போலத்தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து முஸ்லீம்களுக்கு என்று தனியான கல்வி வலயத்தை உருவாக்க வேண்டுமென முயற்சி எடுத்த காலத்தில் பிரதி அமைச்சர் MSS. அமீர் அலி அவர்கள் அன்றிருந்த முஸ்லீம் தமிழ் அரசியல் தலைவர்களால் விமர்சிக்கப்பட்டதுடன் இது நடைமுறைக்கு சாத்தியமற்றது எனவும் இது வெறும் வாய் கோசம் என்றும் இது இடம்பெற மாட்டாது என உறுதிபட கூறிய போதிலும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் கல்விச் சமூகத்தின் உரிமையை பெற்றுக்கொடுப்பதில் பெரும் பங்காற்றியவர் MSS. அமீர் அலி.

அது மாத்திரமல்லாமல் இந்த வலயங்கள் ஒன்றாக இருந்தபோது வெளிப்படுத்தப்படாத முஸ்லீம்களின் கல்வி வளர்ச்சி கல்வி வலயப் பிரிவின் பின்னர் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் க.பொ.சாதாரன தரப்பரீட்சையில் தேசிய ரீதியில் தொடர்ச்சியாக மூன்று முறை முதலாவது இடத்தை பெற்று முஸ்லீம் சமூகத்தின் கல்வி வளர்ச்சியை தேசியத்துக்கு பறை சாட்டிக் காட்டியது இதன் அடிப்படையில் ஏனைய பரீட்சைகளிலும் நல்ல பல சிறந்த பெறுபேறுகளை மட்டக்களப்பு மத்தி வலயம் பெற்றுக் கொண்டுள்ளது.

இவ்வனைத்துக்கும் தனது அயராத உழைப்பும் முஸ்லீம் சமூகத்தின் கல்வி வளர்ச்சியின் மீது பிரதி அமைச்சர் M.S.S. அமீர் அலி அவர்கள் காட்டிய அக்கரையாகும் என்பதில் துளி கூட சந்தேகமில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லீம் கல்வி சமூகத்தின் மீது காட்டப்பட்ட பாரபட்சங்களை கண்டும் காணாது முஸ்லீம் சமூகம் சார்ந்த பல அமைச்சர்கள் இருந்த போதிலும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும், எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம் கல்வி சமூகத்தின் உரிமையை பிரித்தெடுத்து நிலை நிறுத்துவதில் வெற்றி கண்டவர் பிரதி அமைச்சர் M.S.S. அமீர் அலி.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம் கல்வி சமூகத்தின் வளர்ச்சியை மேன்படுத்துவதில் வெற்றி கண்ட பிரிதியமைச்சர் M.S.S. அமீர் அலி அவர்களை மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம் கல்விச் சமூகம் முழுமையாக மறந்து அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலில் அவரை தோல்வி அடைய செய்து கல்வி வலயத்தின் வளத்தேவைகளை முழுமையாக பெற்றுக் கொடுக்க முடியாமல் செய்யப்பட்டது இருந்த போதிலும் தன்னால் முடியுமான வரையில் குறித்த கல்வி வலயத்தின் வளர்ச்சியை மேன்படுத்துவதில் ஒரு மாகாண சபை உறுப்பினராக இருந்து முழுமையான அக்கரை செலுத்தி வந்தார் பிரிதயமைச்சர் M.S.S. அமீர் அலி அதன் பிரதிபலிப்பாக இன்று தேரிய ரீதியில் முதலாம் இடத்தை பிடிப்பதற்கு காரண கர்த்தாக அமைந்தது.

அது மட்டுமல்லாமல் இக்கல்வி வலயத்தினை நிறுவியதில் மாவட்டத்தின் பிரதேச வாதங்களை தகர்த்தெறிந்து பிரதேச வாதங்களுக்கு அப்பால் தனது சொந்த ஊரான கல்குடா பிரதேசத்துக்கு குறித்த கல்வி வலய காரியாலயத்தை நிறுவாமல் வலயத்தின் மத்திய பகுதியான ஏறாவூர் பிரதேசத்தில் கல்வி வலய காரியாலத்தை நிறுவியதன் மூலம் நிர்வாக செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியவர் பிரிதி அமைச்சர் M.S.S. அமீர் அலி அவர்கள் தான் எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY