(Poem) கா-குடியும் கழிவு அகற்றலும்

0
21

(Mohamed Nizous)

எப்பையா வருவீங்க
குப்பையை அகற்ற
ஊரெல்லாம் நாறுது
உடலுக்கு ஊறு இது.

உக்காத குப்பையை
ஊட்டுக்குள் வைக்கட்டாம்.
கக்காவுடன் பம்பர்ஸை
கட்டி வெச்சிருக்காங்க.

உடனடியா நகர சபை
ஊத்தைய அள்ளாட்டி
இடமெல்லாம் அசிங்கமாகி
எம் வாழ்வு நசுங்கி விடும்..

காகம் இழுக்கிறது
கட்டெறும்பு பெருகிறது
சோகம் என்னவென்றால்
சொலூஷன் தர யாருமில்லை.

நுளம்புகள் பெருகி
நோய் வந்த பின்னாலே
கிளம்பி வருவாக
கேஷும் போடுவாக.

ஒரு சில வீதிகளில்
ஒழுங்காக அகற்றினாலும்
பெரும்பான்மை வீடுகளில்
துர் நாற்றம் அடிக்கிறது

ரோட்டுப் போடுவதிலும்
ரொம்ப முக்கியம்
ஓட்டுப் போட்டவரின்
ஊர் சுத்தம் பேணுதல்.

போட்டித் தலைமைகளே!
காட்டாட்டித் தீர்வை-
ரோட்டில போடுவார்
ரொம்ப நாள் பொறுக்கார்.

LEAVE A REPLY