ஸ்மார்ட்போன் தொலைந்து விட்டதா? இதோ கண்டுபிடிக்க அருமையான வழி

0
88

625.117.560.350.160.300.053.800.210.160.90ஒருவருக்கு தனது கையடக்க தொலைபேசியானது மிக முக்கியமான இயந்திரமாகும்.

நவீனகாலத்தில் இத்தகைய கையடக்க தொலைபேசிகள் தொலைந்து விடும் சந்தர்ப்பத்தில் அதனை விரைவில் துல்லியமாக கண்டுபிடிக்க வழிகள் உண்டு.

Iphoneகளுக்கு பிரத்தியேக வழிகள் இருப்பதுடன் Android இயங்குதளம் கொண்ட தொலைபேசிகளுக்கும் சிறந்த வழிமுறைகள் உண்டு.

முதலில் உங்களுக்கு ஒரு வலுவான மின்னஞ்சல் முகவரி அவசியம். அதனை Google / Gmail மூலமாகவோ அல்லது வேறு மின்னஞ்சல் சேவை மூலமாகவோ உருவாக்கி கொள்ளலாம்.அதன் பின்னர் உங்கள் கையடக்க தொலைபேசியில் “Phone Tracker” அல்லது அதனை ஒத்த ஒரு மென்பொருளை தரவிறக்கம் செய்து பதிவு செய்து கொள்ளவும்.

அதன் பதிவின்போது உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்படும், அவற்றில் மின்னஞ்சல் முகவரியும் ஒன்று.

அவை எல்லாவற்றையும் முறையாக நிரப்பிய பின்னர், உங்கள் மடிக்கணனி அல்லது வேறு கணனிக்கு சென்று Google தேடல் பொறியில் “Find my Phone” என்ற சொற்றொடரை தேடச் செய்யும் பொழுது, உங்களுக்கு ஒருவரைபடம் தெரியும். அந்த வரைபடத்தில் ஏற்கெனவே நீங்கள் உங்கள் கைடக்க தொலைபேசியில் பதிந்த உங்கள் தொலைபேசி தகவல்களின் அடிப்படையில் தொலைபேசியின் இருப்பிடத்தை அறியலாம்.

மேலும் அந்த சுற்று வட்டத்திற்குள் உள்ள ஏனைய தொலைபேசிகருவிகளையும் அதுகாட்டும். ஆனால் அவற்றை கட்டுப்படுத்த முறையான தகவல் பதிவு அவசியம்.

இவ்வாறு தகவல்கள் மற்றும் வரைபடம் தெரிந்ததும் தொலைபேசியில் ஒருஒலியை ஒலிக்க செய்யலாம்.

ஒலியை ஒலிக்கச் செய்வதன் மூலம் தொலைபேசி–கணனிவலையமைப்பு வேலை செய்கிறதா என்று பார்க்கலாம் அல்லது LOCK செய்யலாம்.

LOCK செய்தால் அந்த தொலைபேசியை அதன் பின்னர் இயக்க முடியாது. அதனை விடுத்து ERASE செய்யலாம். அவ்வாறுசெய்தால் அந்த தொலைபேசியை முழுமையாக செயலிழக்க செயயமுடியும்.

நீங்கள் முறையாக பதிந்து அடையாளத்தை உறுதிப்படுத்தினால் மட்டுமே இவையெல்லாவற்றையும் செய்ய முடியும். இது ஒரு பாதுகாப்பான வழிமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY