ஹிப்ழு மாணவர்களுக்கு இலவசமாக அல்-குர்ஆனை வழங்க முன்வாருங்கள்:ACMYC வேண்டுகோள்

0
284

(MJM.Sajeeth)

201606191452325604_Quran-reading-free-petrol-in-indonesia_SECVPFஅகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் (ACMYC) ஏற்பாட்டில் தேசிய ரீதியாக பல்வேறு சமூகநல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வமைப்பின் இவ்வருடத்தின் முதற்கட்ட வேலைத்திட்டமாக முஸ்லிம், தமிழ், சிங்கள, சிறிஸ்தவ 04 மதத்தைச் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இவ்வமைப்பின் இவ்வருடத்தின் இரண்டாவது வேலைத்திட்டமாக புனித இஸ்லாம் மார்க்கத்தை தழுவிய சகோதர, சகோதரிகளுக்கு றமழான் காலப்பகுதியில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

தற்போது இவ்வமைப்பின் மூன்றாவது வேலைத்திட்டமாக அல்குர்ஆனை மனனம் செய்வதற்காக முழு நேர ஹிப்ழு பிரிவில் நேர்முகப்பரீட்சையில் அரபுக் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியில் 2000 அல்குர்ஆன் பிரதிகளை இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே. இத்திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தங்களின் உதவிகளும் தேவையாக உள்ளது. ஒரு அல்குர்ஆன் பிரதியினதும் அதனை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாட்டு செலவாகவும் ரூபா 800/= தேவையாகவுள்ளது.

ஒரு அல்குர்ஆன் பிரதி வாங்கும் பணத்தையாவது நீங்கள் இத்திட்டத்திற்கு 2016.10.04ம் திகதிக்கு முன் சிறிய ஒரு பணத்தை ஸதகா செய்து அழியா மிகப் பெரும் நன்மைகளை ஈட்டிக் கொள்ள உங்களை ACMYC இஸ்லாமிய அமைப்பு அழைக்கின்றது.

உங்கள் பணத்தின் ஊடாக வாங்கப்பட்ட அந்த அல்குர்ஆனை மனனம் செய்வதற்காக மாணவர்கள் பார்த்து ஓதும் போது அதன் நன்மைகள் உங்களுக்கும் கிடைக்கும்.

உங்களினால் பத்து அல்குர்ஆன் பிரதிகளை வாங்கிக் கொடுக்க முடியுமானால் பத்து அல்குர்ஆன் பிரதிகள் வாங்கக் கூடிய நிதியினை கொடுத்து இத்திட்டத்திற்கு உதவுங்கள். உங்களின் உதவியினால் 10 ஹாபிழ்கள் உருவாகலாம் அல்லவா.

இத்திட்டத்திற்காக உதவிகளை செய்ய விரும்புவோர் கீழ் குறிப்பிடப்படும் வங்கிக் கணக்கிற்கு உங்களுடைய பண உதவிகளை வழங்க முடியும்.

Bank – Commercial Bank

Branch – Akkraipattu

Account Name – NM.Najath

Account Number – 8172005497

உங்களின் நிதி உதவிகளை பின்வரும் டயலொக் இலக்கத்திற்கும் EZ CASH செய்ய முடியும்.

EZ CASH Phone No – 0778325826

மேலதிக தொடர்புகளுக்கு:

www.ACMYC.com

0094752365958(ACMYC MAIN ADMIN)

0094772374138(Ash Skh Aflal (Ihsani))

“நீங்கள் எந்தப் பொருளை செலவு செய்தாலும் அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்”

(அல்-குர்ஆன்

LEAVE A REPLY