கல்முனை மாநகர ஆணையாளரை அச்சுறுத்திய இருவர் நீதிமன்றில் ஆஜர்; ஊழியர்களின் போராட்டம் நிறைவு!

0
117
(அஸ்லம் எஸ்.மௌலானா)
unnamed (2)கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலியை அச்சுறுத்திய வர்த்தகர் உள்ளிட்ட இருவர் இன்று செவ்வாய்க்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரையும் தலா 75 ஆயிரம் ரூபா சரீரப் பிணையிலும் 1500 ரூபா ரொக்கப் பிணையிலும் விடுவித்த கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பி.பயஸ் ரஸ்ஸாக், எதிர்வரும் 19ஆம் திகதி விசாரணைக்காக நீதிமன்றுக்கு ஆஜராகுமாறு  உத்தரவிட்டார்.
இவர்களைக் கைது செய்யக் கோரி நேற்றும் இன்றும் மாநகர சபை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு செய்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்ததுடன் சம்மந்தப்பட்ட நபர்கள் நீதிமன்றுக்கு ஆஜராக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று முற்பகல் 11.30 மணியளவில் அவற்றை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

LEAVE A REPLY