எதிர்க்கட்சி ஆசனத்துக்கு தூக்கிவீசப்பட்ட உதுமாலெப்பையால் பொய்யான அறிக்கை மாத்திரமே விடமுடியும்- அன்வர்

0
148

unnamed (1)கிழக்கு மாகாணத்தில் இன்று நடைபெறும் சேவைகளையும் ஒதுக்கப்படும் நிதிகளையும் பார்த்து எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருக்கும் உதுமாலெப்பையால் ஜீரணிக்க முடியாது முதளைக் கண்ணீர் விடும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் குழுக்களின் தலைவருமான ஆர்.எம்.அன்வர் தெரிவித்துள்ளார்.

கிழக்குமாகாண சபை எதிர்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை இன்று விடுத்திருக்கும் அறிக்கை தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது இவ்வாறு குறிப்பிட்டார்:

அவர் தொடர்ந்து கூறுகையில்:

கடந்த வாரம் உதுமாலெப்பை அவரது அணியினருடன் முதலமைச்சரை அவரது காரியாலயத்தில் சந்தித்து ஐரோட் திட்டத்தில் வந்திருக்கும் வீதிகளில் அவர்களுக்கும் வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். முதலமைச்சரும் அவர்களின் நிலைகண்டு வழங்குவதற்கு தீர்மாணித்தார். ஆனால் இன்று முதலமைச்சரின் செயலால் அவமானம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை விட்டிருப்பது கண்டு வியப்பாக இருக்கிறது.

கிழக்கில் இருக்கும் மூன்று மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு கிராமம், கிராமமாகச் சென்று அங்குள்ள மக்களுக்குத் தேவையான சகல சேவைகளையும் வழங்குவதில் இன்றைய கிழக்கு மாகாண சபையின் ஆட்சி முன்னிலை வகிக்கிறது.

ஆனால் இவைகளைப் பார்த்து ஜீரணிக்க முடியாத எதிர்கட்சித் தலைவரான உதுமாலெப்பையால் அறிக்கை விட்டேனும் தனது வெறுப்பைக்காட்டி கொஞ்சம் சந்தோசமடைகிறார் என்று நினைக்கிறேன்.

இன்று கிழக்கின் சேவைகளைக் கண்டு அதிர்ந்து போன எதிர்கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவராக ஆளும்தரப்பின் பக்கம் வந்தவண்ணம் இருக்கின்றனர். ஈற்றில் எதிர்கட்சித் தலைவரான உதுமாலெப்பையை மாத்திரம் வைத்து விட்டு ஏனையவர்கள் அனைவரும் எமது பக்கம் சேர்ந்து விடுவார்கள் என்று நம்புகிறேன்.

எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்து பழக்கப்படாத முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை இன்று பறந்து திரிகின்றார். கிழக்கின் ஆட்சியில் மூன்று சமூகமும் ஒற்றுமையாக வாழ வேண்டும் அதற்காக வழிவகுக்கும் இத்தருணத்தில் இவர் போன்றோர் அம்மக்களையும் கூட்டிவிட்டு குளிர்காய நினைக்கின்றனர். தங்களுக்குப் பதவிகள் கிடைத்தால் போதும் மக்கள் எக்கேடு கெட்டாலும் பறவாயில்லை என்று அன்று தனது பதவிக்காக மாத்திரம் சம்மந்தன் ஐய்யாவுடன் ஒப்பந்தம் செய்யச் சென்று அவர் விரட்டி விட்ட நிலையில் இடுப்புடைந்தவராக இருந்து கொண்டிருக்கும் இவர் இன்று முதலமைச்சரின் செயல் கண்டு வெட்கப்படுவதாகக் கூறுவது புதிய வேடிக்கையாகவே இருக்கிறது.

எனவே இப்படியான அறிக்கைகளினால் தளர்ந்து போய் மக்களுக்கான சேவைகளைச் செய்வதில் நாம் ஒருபோதும் பின்னிக்கப்போவதில்லை ஆகவே அறிக்கையைத் தவிர வேறெதுவுமே எதிர்கட்சித் தலைவரால் செய்ய முடியாது என்ற கசப்பான உண்மையை உணர்ந்து கொண்ட அவர் தடுமாறிக்கொண்டிருக்கிறார். வரப்போகும் தேர்தலை எவ்வாறு முகம்கொடுப்பது என்ற அச்சத்தில் மயக்கமாய் அலைகிறார்.

எனவே அவர் வாக்களித்த மக்களுக்கு இருக்கும் காலத்தில் ஏதும் நல்லது செய்யவேண்டும் என்றால் எம்முடன் வந்து இணைந்து சமூகத்துக்கான சேவைகளைச் செய்ய அவருக்கு பரிதாபமான அழைப்பினை விடுக்கின்றோம் என்று மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தனதறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY