இருதய நோயாளிகளும் ஹஜ் கடமையினை நிறைவேற்றலாம்: சவூதி சுகாதார அமைச்சு அனுமதி

0
225

(எம்.ஐ.அப்துல் நஸார்)

unnamedஸ்திரமான உடல் நிலை காணப்பட்டால் இருதய நோயாளிகளும் ஹஜ் கடமையினை நிறைவேற்றலாம் என சவூதி சுகாதார அமைச்சு உள்ளூர் ஹஜ் யாத்திரிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

நெஞ்சுவலி அல்லது சுவாசிப்பதில் சிரமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய அனவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு, இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருத்தல் தவிர்ந்த இருதய நோயாளிகள் ஹஜ் கடமையினை நிறைவேற்றலாம் என சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஹஜ் விடயம் சம்பந்தமாக அமைச்சின் இணையத் தளத்திலும், டுவிட்டர் சமூக வலைத்தள சேவையிலும் இயைத்தள ஆலோசனைகளை கேட்போர்களுக்கு அவ்வமைச்சினால் நடாத்தப்படும் 800 249 4444 இலக்க கட்ணமில்லாத ஹஜ் தொலைபேசி சேவையினூடாக இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

‘இருதய நோயாளிகள் நீரிழிவு நோயினையும் இரத்த அழுத்தத்தினையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். பொதுவாக தனது உடல் ஆரோக்கிய நிலையில் இருக்கின்றது என்பதனை உறுதிப்படுத்திக் கொள்வதோடு ஹஜ் கடமையினை நிறைவேற்றச் செல்வதற்கு முன்னர் வைத்தியரின் ஆலோசனையினைப் பொற்றுக் கொள்ள வேண்டும்’

மூளைக் காய்ச்சல் மற்றும் குறித்த பருவ காலங்களில் ஏற்படும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றிக் கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இருதய நோயாளிகள், விசேடமாக இதயத் தசைகள் பலவீனமான நிலையில் உள்ளவர்களுக்கு இன்புளுவென்ஸா தொற்று ஏற்படுமானால் அவர்களுக்கு பாரிய பாதிப்புகள் ஏற்படும் சாத்தியம் உள்ளதோடு இதயம் செலிழக்கும் நிலையும் ஏற்படும்.

யாத்திரிகைக் காலம் முழுவதும் போதுமான அளவில் அவர்கள் தொடராகப் பயன்படுத்திவரும் மருந்து வகைகளை தம்வசம் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ‘வைத்தியர்களால் வழங்கப்பட்ட மருந்து மாத்திரைகளை தொடராகப் பயன்படுத்த வேண்டும், எந்தக் காரணத்திற்காகவும் அவற்றை நிறுத்திவிடக் கூடாது. இரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பதன் காரணமாக நெஞ்சுவலி ஏற்படுபவர்கள் தம்வசம் எந்நேரமும் நைற்றோகிளிசரின் மாத்திரைகளை வைத்திருக்க வேண்டும். குறித்த மாத்திரயினை நெஞ்சுவலி ஏற்படும் போது நாக்கின் கீழ்ப்பகுதியில் வைக்க வேண்டும்’

இதயம் சம்பந்தமான பிரச்சனை இருப்பவர்கள் உடல் உள ரீதியாக தம்மை வருத்திக் கொள்ளக் கூடாது அத்துடன் உளவியல்சார்ந்த தொந்தரவுக்குட்படவும் கூடாது. உணவில் அவர்கள் கவனம் செலுத்துவதோடு உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். சன நெரிசல்மிக்க பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் அல்லது உடனடி நடவடிக்கைக்காக 977 அல்லது 911 என்ற செம்பிறைப் பிரிவினருக்கு அழைப்பினை ஏற்படுத்த வேண்டும்.

வெயில் தாக்கம் இருதய நோயாளிகளுக்கு ஆபத்ததானது எனச் சுட்டிக் காட்டியுள்ள அதிகாரிகள், விசேடமாக அதிகம் நீரிழப்பை ஏற்படுத்தக்கூடிய இரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகள், இரத்ததத்தை மேலும் மெலிதாக்கக் கூடிய அஸ்பிரின் மற்றும் அதேபோன்ற வகையான மாத்திரைகள் மயக்கம், திடீரென விழுதல் மற்றும் குருதி வெளிறேல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.
இருதய நோயாளிகள் அதிகளவு தண்ணீர் மற்றும் நீராகாரங்களை அருந்த வேண்டும். வெயில் நடமாடுவதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஹஜ் பருவகாலத்தில் அதிக வெப்பநிலை காணப்படும்.

முடியுமானவரை உடலை வருத்திக்கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைவலி, வாந்தி மற்றும் சோர்வு, தசைப் பிடிப்பு, உயர் அளவான உடல் வெப்பநிலை என்பன போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் போதுமான அளவில் நீராகாரங்களை உட்கொள்வதோடு உடல் சூட்டைத் தணிப்பதற்கான மாத்திரைகளையும் உட்கொள்ள வேண்டும்.

இந்தத் தொலைபேசி சேவையின் மூலமாக புனித நகருக்கு யாத்திர செல்லவிருப்போர் தமது யாத்திரை மற்றும் ஆரோக்கிய நிலைமைகள் தொடர்பில் முன்வைக்கப்படும் வினாக்களுக்கு திறமைவாய்ந்த குழுவினரால் உடனுக்குடன் பதிலளிக்கப்படுகின்றது.

அந்த மருத்துவக் குழுவில் வைத்திய நிபுணர்கள், இதய நோய் மருத்துவர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், மருந்தாளர்கள் மற்றும் பல் வைத்தியர்கள் போன்றோர் உள்ளடங்கியிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி அமைச்சிலும் நகர வைத்தியசாலையில் கடமையாற்றும் சவூதிப் பெண்கள் குழுவொன்றினால் நடாத்தப்படுகின்றது.

தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தும் அனைவரினதும் இரகசியம் பேணப்படும் குறிப்பாக நிரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்தம் காணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது மருந்து உட்கொள்ளும் அளவு, யாத்திiயின்போது தமது இன்ஸுலின் மருந்தினை எவ்வாறு களஞ்சியப்படுத்துவது போன்ற கேள்விகளைக் கேட்கும் ஆண்களும், தடுப்பூசி மற்றும் தமது மாதவிலக்கு தொடர்பான கேள்விகளைக் கேட்கும் பெண்களும் தமது கேள்விகளை இதன்போது சுதந்திரமாக முன் வைக்கமுடியும்.

LEAVE A REPLY