இலங்கை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஒப்பானதே மலேசிய சம்பவம்: மஹிந்த

0
155

Mahinda-Rajapaksaபிரிவினைவாதிகளினால் எத்தகைய இடையூறு வந்தபோதும் தான் அரசியலிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மலேசிய தூதுவர் மீதான தாக்குதல், தனிப்பட்ட தாக்குதலன்றி இலங்கை அரசாங்கம் மீதான தாக்குதல் எனவும் அவர் கூறினார்.

மலேசியாவுக்கு விஜயம் செய்திருந்த முன்னாள் ஜனாதிபதி நேற்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாடு திரும்பினார்.

அவரை வரவேற்க விமான நிலையத்தில் பெருந்திரளான மக்கள் வருகை தந்திருந்தனர். அவருக்கு ஆதரவாக கோசம் எழுப்பப்பட்டதோடு மஹிந்த ஆதரவு அணி எம்பிக்களும் அங்கு வந்திருந்தனர்.

இங்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

எந்தப் பிரச்சினைக்கும் முகம் கொடுக்க தயாராகவே மலேசியா சென்றேன். பிரினவாதிகள் இடையூறு செய்தபோதும் ஏற்கெனவே திட்டமிட்டபடி சகல கூட்டங்களுக்கும் சென்றேன். விகாரைமீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு மட்டும் செல்லவில்லை.

நான் பிரிவினைவாதத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி அதனை தோற்கடித்தேன். இடையூறுகளினால் எனது பயணத்தை தடுக்க முடியாது.

விமான நிலையத்திற்கு வந்து முன்னாள் அமைச்சர்களை வழியனுப்ப வந்தபோதே தூதுவர் தாக்கப்பட்டார். இதை அரசாங்கம் மீதான தாக்குதலாகவே கருத வேண்டும் என்றார்.

நல்லிணக்க அரசு குறித்து கருத்து வெளியட்ட அவர், ஐ.தே.க வின் கொள்கையும் எமது கொள்கையும் வித்தியாசமானவை. எஸ். டபிள்யூ. பண்டநாயக்க ஐ.தே.க விலிருந்து விலகி சு. க வை ஆரம்பித்தார்.

மீண்டும் ஐ.தே.க வுடன் இணைவதற்காக அவர் சு.க.வை ஆரம்பிக்கவில்லை. ஐ.தே.க எமது கொள்கையை ஏற்கவில்லை. சு.க தான் ஐ.தே.க கொள்கையை ஏற்று நல்லிணக்க அரசில் இணைந்துள்ளது என்றார்.

#Thinakaran

LEAVE A REPLY