காபூல் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 24 பேர் பலி, 90 பேர் படுகாயம்

0
98

201609052057506974_Twin-Taliban-suicide-blasts-in-Kabul-kill-24_SECVPFஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாதுகாப்பு துறை அமைச்சகம் அருகே இன்று மதியம் இரட்டை குண்டுவெடிப்பு நடைபெற்றது.

ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 13 பேரை பலிகொண்ட தற்கொலைப்படை தாக்குதல் நடந்து இரண்டு வாரங்களே ஆகியிருக்கும் நிலையில் மீண்டும் அங்கு இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அருகே இரண்டு தற்கொலைப்படை தீவிரவாதிகள் தங்கள் உடலில் கட்டி வந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மக்கள் நடமாட்டம் அதிமுள்ள நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர்.

90-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் ஆப்கான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் முகமது ரதிமானிஷ் தெரிவித்துள்ளார்.

அமைச்சகத்தில் இருந்து வேலை முடிந்து வெளியே வந்த அரசு ஊழியர்கள் நிறைய பேர் இதில் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY