உழ்ஹிய்யாவுக்காக கிழக்கு மாகாணத்திலிருந்து கால்நடைகளை வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்வதில் எந்த தடைகளுமில்லை: எம்.எஸ் சுபையிர்

0
480

(ஏ.எல். றியாஸ்)

MS Subair MPCபுனித ஹஜ்ஜூப் பெருநாளையொட்டி உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றுவதற்காக கிழக்கு மாகாணத்திலிருந்து கால்நடைகளை வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்வதில் எந்தத்தடைகளுமில்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.

உழ்ஹிய்யா கடமையினை நிறைவேற்றுவோர் அதுசம்மந்தமான சட்டவிதிகளை கடைப்பிடித்து ஏனையோரின் உணர்வுகளை தூண்டாத வகையில் தங்களது கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலிருந்து உழ்ஹிய்யா கடமைக்காக கால்நடைகளை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சிணைகள் தொடர்பில் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தித் திணைக்களப் பணிப்பாளரை தொடர்புகொண்ட போது அவர் மேற்படி உறுதிமொழி வழங்கியதாகவும் மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.

குறிப்பாக உழ்ஹிய்யா கடமைக்காக பசு மாடுகளையும், நோயுள்ள மாடுகளையும் கொண்டு செல்ல முடியாது எனவும், அதற்குத் தகுதியானவற்றை உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்ல எந்தத்தடையும் இல்லையெனவும் பணிப்பாளர் தெரிவித்ததாக மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY