11 மாத குழந்தை மீது பாலியல் பலாத்காரம்

0
241

rape-1-600-04-1472985313தூங்கிக் கொண்டிருந்த 11 மாத குழந்தையைக் கடத்திச் சென்று காட்டுப் பகுதியில் வைத்து பலாத்காரம் செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் மேற்கு டெல்லியில் உள்ள விகாஸ்புரி பிரதேசத்தில் பொலிஸ் குடியிருப்புக்கு உள்ளே குடிசை போட்டு கட்டுமானத் தொழிலாளர்கள் கட்டுமானப் பணிக்காக தங்கியுள்ளனர்.

அங்கு தனது தாயாரோடு குறித்த கைக்குழந்தையும் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது குறித்தநபர் அக்குழந்தையை கடத்திச் சென்று அருகில் உள்ள காட்டுப் பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

நித்திரையில் இருந்த தாயார் இரவு திடீரென விழித்த பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தில் தேடியபோது, குழந்தை அங்குள்ள புதரில் மயக்க நிலையில் கிடந்ததை தாயார் கண்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த விகாஸ்புரி பொலிஸார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.குறித்த குழந்தை கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.

குழந்தை கிடந்த இடத்திலிருந்து கண்டெடுத்த கையடக்கத்தொலைபேசியை வைத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போதே குறித்த சந்தேகநபர் கண்டுபிடிக்கப்பட்டார்.

மேலும், குறித்த நபரை பொலிஸார் கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY