வாஸ் குணவர்தனவுக்கு நீதிமன்றில் ஆஜராகும்படி கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்தல்

0
106

vaas-gunawardenaமுன்னாள் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன ஆகியோரை எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகும்படி கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.கடந்த 2009 ஆம் ஆண்டு மாலபே தகவல் தொழினுட்ப கல்லூரியில் கல்வி கற்ற மாணவர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் இவர்களை நீதிமன்றில் ஆஜராகும்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இருவரையும் நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு, சிறைச்சாலை ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாணவனை தாக்கியமை தொடர்பில் குறித்த இருவர் உட்பட எட்டு பேர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY