சிரியாவில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்: 43 பேர் பலி

0
136

201609051519382242_Twin-bombing-kills-43-in-syria_SECVPFசிரியாவில் உள்ள மத்திய தரைக்கடல் பகுதியான டார்டஸ் நகரில் இன்று இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் 43 பேர் உயிரிழந்துள்ளனர். 45 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

டார்டஸ் நகரில் உள்ள மேம்பாலப் பகுதியில் முதலில் கார் குண்டு தாக்குதலை தீவிரவாதி நடத்தியுள்ளான். இதையடுத்து, தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவ அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள் மீதும் மறைந்திருந்த அதே தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச்செய்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் பொதுமக்கள் 43 பேர் உயிரிழந்துள்ளனர். 45 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

LEAVE A REPLY