காணாமல் போன வர்த்தகர் நஸ்ரினின் புகைப்படம் இதுதான்

0
137

(அப்துல்சலாம் யாசீம்-)

fdfdஇலங்கை வங்கியின் ஏல விற்பனை திருகோணமலையில் நேற்று (04) நடைபெற்ற போது ஏல விற்பனையில் நகைகளை வாங்குவதற்காக வந்த நபரை காணவில்லையென திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போனவர் களுத்தறை மாவட்டம் அட்டுலுகம-மாவத்த பகுதியைச்சேர்ந்த எம்.எச்.நஸ்ரின் (36 வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- அட்டுலுகம பகுதியிலிருந்து திருகோணமலை இலங்கை வங்கிக்கு ஏல விற்பனையில் நகைகளை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த வேளை தண்ணீர் குடிப்பதற்காக வங்கிக்கு வௌியே சென்றவரை காணவில்லையெனவும் அவரிடம் 20 இலச்சம் ரூபாய் பணம் கைவசம் இருந்ததாகவும் அவருடன் வருகை தந்த முகம்மட் லெப்பை முஹிதீன் பிர்தௌஸ் என்பவர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இம்முறைப்பாடு தொடர்பாக வங்கியில் பொறுத்தப்பட்டிருந்த சீசீடி கெமராவை சோதனை செய்துள்ளதாகவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY